...
உன்னை கிட்ட சென்று இழப்பதை விட
நான் எட்ட சென்று இரசிப்பது சுகம் ...
உன்னை தேடும் பகலை விட
உன் நினைவில் வாழும் என் இரவுகள் சுகம் ...
உன்னுள் வாடும் என் நனவை விட
என்னுள் வாழும் உன் கனவுகள் சுகம் ...
உன்னில் சாகும் என்னை விட
என்னில் வாழும் உன் நினைவுகள் சுகம்...
நம் இருதலை காதல் சேர்ந்து சாவதை விட
என் ஒருதலை காதல் வாழ்வதில் சுகம் சுகம் சுகம் ..
Comments
Post a Comment